Sunday, October 18, 2026
Breaking

இலங்கையை 3-0 என வீழ்த்தி T20I தொடரை முழுமையாகக் கைப்பற்றிய இங்கிலாந்து

இலங்கையை 3-0 என வீழ்த்தி T20I தொடரை முழுமையாகக் கைப்பற்றிய இங்கிலாந்து
Advertisement

இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் இறுதி T20I போட்டியில் 8 விக்கெட்டுகளால் அபார வெற்றியை பதிவு செய்த இங்கிலாந்து அணி, மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என முழுமையாகக் கைப்பற்றியது.

போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணிக்கு அழைப்பு விடுத்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 124 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

இலங்கை அணியின் சார்பில் Pathum Nissanka 36 ஓட்டங்களையும், Kamindu Mendis 35 ஓட்டங்களையும் பெற்றனர்.

125 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, 9.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை எட்டியது.

இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய அணித் தலைவர் Jos Buttler, 31 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 62 ஓட்டங்களை பெற்றார்.

அவருக்கு சிறப்பான ஒத்துழைப்பை வழங்கிய Harry Brook, வெறும் 11 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 33 ஓட்டங்களை விளாசினார்.

இலங்கை அணியின் பந்துவீச்சில் Tharindu Rathnayake 28 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி, இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடரை 3-0 என முழுமையாக வென்று தொடரைக் கைப்பற்றியது.
Advertisement
Advertisement
Advertisement