Match Reports
பங்களாதேஷை வீழ்த்தி இலங்கைக்கு ஆசிய விளையாட்டு வெண்கலப் பதக்கம்
October 03, 2026
09:31 PM
Main Admin
ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு விழாவின் ஆடவர் கிரிக்கெட் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை இலங்கை அணி இன்று (03) வென்றது.
வெண்கலப் பதக்கத்திற்காக நடைபெற்ற போட்டியில் பங்களாதேஷ் அணியை 63 ஓட்டங்களால் வீழ்த்தி இலங்கை இந்த வெற்றியைப் பதிவு செய்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 165 ஓட்டங்களைப் பெற்றது.
இதையடுத்து 166 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய பங்களாதேஷ் அணியால், இலங்கையின் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக சிறப்பாக செயல்பட முடியவில்லை. அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 102 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.
இதன் மூலம் இலங்கை அணி 63 ஓட்டங்களால் சிறப்பான வெற்றியைப் பதிவு செய்து, ஆசிய விளையாட்டு விழாவின் ஆடவர் கிரிக்கெட் வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது.
இது இம்முறை ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கை வென்ற மூன்றாவது பதக்கமாகும். இதுவரை இலங்கை ஒரு தங்கப் பதக்கம், ஒரு வெள்ளிப் பதக்கம் மற்றும் ஒரு வெண்கலப் பதக்கம் என மொத்தம் மூன்று பதக்கங்களை வென்றுள்ளது.