சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், 2026 மகளிர் இருபது20 உலகக் கோப்பைக்கான பரிசுத் தொகையை அறிவித்துள்ளது.
அதன்படி, இப்போட்டியில் வழங்கப்படும் மொத்த பரிசுத் தொகை 8,764,615 அமெரிக்க டாலர்கள் ஆகும்.
இது 2024-ல் வழங்கப்பட்ட பரிசுத் தொகையை விட 10 சதவீதம் அதிகமாகும்.
2026-ல் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு 2,340,000 அமெரிக்க டாலர்களும், இரண்டாம் இடம் பெறும் அணிக்கு 1,170,000 அமெரிக்க டாலர்களும் வழங்கப்படும்.
அரை இறுதிப் போட்டிகளில் தோற்கும் இரண்டு அணிகளுக்கும் தலா 675,000 அமெரிக்க டாலர்கள் வழங்கப்படும்.
மேலும், தகுதிச் சுற்றில் விளையாடும் ஒவ்வொரு அணியும் குறைந்தபட்சம் 247,500 அமெரிக்க டாலர்களைப் பெறும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது.